Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

ஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் புத்தாக்கத்தை பதித்துவரும் யூனியன் அஷ்யூரன்ஸ், மில்லியன் டொலர் வட்ட மேசை (MDRT) அனுபவ நிகழ்வு மற்றும் சர்வதேச மாநாட்டில் மீண்டுமொரு தடவை வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. இந்த மாநாட்டில் மொத்தமாக 83 யூனியன் அஷ்யூரன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பெருமளவு யூனியன் அஷ்யூரன்ஸ் நிதி ஆலோசகர்கள் மற்றும் விற்பனை முகாமைத்துவத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இலங்கையின் காப்புறுதி துறையிலிருந்து அதிகளவு பிரதிநிதிகள் பங்கேற்ற நிறுவனமாக அமைந்திருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டுக்கு அதிகளவான அங்கத்தவர்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு 2016 ஜனவரி 28 முதல் 30 ஆம் திகதி வரை ஹொங் கொங் நகரில் நடைபெற்றது.

1927 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மில்லியன் டொலர் வட்ட மேசை மாநாடு (MDRT), நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் முன்னணி சம்மேளனமாக திகழ்கிறது. மேலும், 71நாடுகளைச் சேர்ந்த 470க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் 42,000க்கும் அதிகமான முன்னணி காப்புறுதி மற்றும் நிதிச்சேவைகளை வழங்கும் அதிகாரிகளின் சர்வதேச, சுயாதீன சம்மேளனமாகவும் திகழ்கிறது. MDRT அங்கத்தவர்கள் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிவை கொண்டிருப்பதுடன், நன்நெறி சார்ந்த செயற்பாட்டையும் கொண்டுள்ளனர். மேலும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. MDRT அங்கத்துவம் என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள் வியாபாரத்தில் நியமங்களையும் கொண்டுள்ளது.

யூனியன் அஷ்யூன்ஸ் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், 'யூனியன் அஷ்யூரன்ஸ் பிரத்தியேக நிதி ஆலோசகர்கள் நிபுணர்களாக காணப்படுவதுடன், நாட்டின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதிப் பாதுகாப்புகளை வழங்குவதற்கு சிறந்த தகைமை பெற்ற அணியாகவும் காணப்படுகின்றனர். எமது ஊழியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முதலீடுகளை மேற்கொள்வதன் மூலமாக அவர்களின் நிபுணத்துவ திறமைகளை மேம்படுத்தி வருவதுடன், உலகத் தரம் வாய்ந்த காப்புறுதி நிபுணர்களையும் உருவாக்கி வருகிறோம். ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக வெகுமதிகள் வழங்கப்படுவதுடன், வெற்றிக்கான அவர்களின் பயணத்துக்காக உதவிகளும் வழங்கப்படுகின்றன. மக்கள் அபிவிருத்திக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு காரணமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக SLITAD இன் மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கல் 2015 இல் பெருமைக்குரிய தங்க விருதை பெற்றுக் கொண்டது.' என்றார்.

சர்வதேச மாநாட்டுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரத்தியேக நிதி ஆலோசகர்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் போது உயர் தரம் வாய்ந்த நியமங்களையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களின் வியாபார கொடுக்கல் வாங்கல்களின் போது ஒழுக்கநெறியை பின்பற்றியிருந்தனர். யூனியன் அஷ்யூரன்ஸின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பையும் வழங்கியிருந்ததுடன், காப்புறுதித் துறையில் நிறுவனத்தின் உறுதியான ஸ்தானத்தை பெற்றுக் கொள்வதிலும் முக்கிய பங்கை வகித்திருந்தனர்.

MDRT இல் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது, துறையில் மிகவும் உயர்ந்த நிலையாக கருதப்படுகிறது. இந்த உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுக் கொள்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தொடர்ச்சியாக இந்நிறுவனம் துறையில் ஏற்படுத்தி வரும் புத்தமைவான செயற்பாடுகளாகும். கம்பனி தொடர்ந்தும் சிறந்த ஊழியர்களை பணிக்கமர்த்துவதுடன், அவர்களுக்கு தமது தொழில் நிலையில் சிறப்பாக செயலாற்றுவதற்கு அவசியமான பயிற்சிகளையும் அவசியமான உதவிகளையும் வழங்கி வருகிறது.

ஓப்பற்ற செயற்பாடுகளில், 28 வருடங்களை பூர்த்தி செய்வதுடன், கம்பனியின செயற்பாடுகளை உறுதியான ஊழியர் செயற்குழு, வலிமையான மூலதன இருப்பு மற்றும் மீள் உறுதி செய்யப்பட்ட மீள் காப்புறுதிதாரர்களுடனான பங்காண்மைகள் போன்றன வலிமைப்படுத்தியுள்ளன. 'நம்பிக்கை' எனும் உறுதி மொழிக்கமைவாக வெளிப்படையான, வசதியான மற்றும் மதிப்புடன் சகல பங்காளர்களுக்கும் கடந்த 28 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ், சேவைகளை வழங்கி வருகிறது.