Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு

நம்பிக்கையான நாளையை உருவாக்கும் வகையில், தனிநபர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொருத்தமான வெவ்வேறு தீர்வுகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதன் மூலம் யூனியன் அஷ்யூர்ன்ஸ், இலங்கையின் காப்புறுதித் துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தனது உயர்ந்த மட்ட சேவைச் சிறப்பு, தீர்வுகள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியவற்றின் மூலமாக, இலங்கையின் காப்புறுதித் துறையில் உயர்ந்தஸ்தானத்தைப் பெற்றுள்ளது.

2015 முதல் காலாண்டில் உறுதியான ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள், நாட்டின் சமூகங்களின் நலன் கருதி பல்வேறு சமூகப் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறது. கம்பனியின் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில், தலசீமியா குறித்த விழ்ப்புணர்வு மற்றும் டெங்கு பரவுதலை தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் இதர ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் போன்றன உள்ளடங்கியிருந்தன.

யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2015 இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் மொத்தமாக 31 தலசீமியா விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இதன் மூலமாக 5866 மக்களை இந்த திட்டத்தில் உள்வாங்கியிருந்தது.

தேசிய தலசீமியா நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர். நிலாம் கருத்து தெரிவிக்கையில், 'இந்த ஆண்டு நாம் பெருமளவான மக்களை சென்றடைந்து, இந்த நிலை தொடர்பில் அவர்களுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தோம். பெருமளவு மக்களை சென்றடைவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது, தலசீமியா தடுப்பு தொடர்பில் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் பாதுகாப்பாக பேணலாம். யூனியன் அஷ்யூரன்ஸ் அணியினருக்கு தேசிய தலசீமியா நிலையம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், இலங்கையை தலசீமியாவிலிருந்து விடுபட்ட நாடாக மாற்றுவதற்கு அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்துள்ளது' என்றார்.

2015 இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டு பகுதிகளில் கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. மொத்தமாக 3 பாரியளவிலான நிகழ்ச்சித்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துவது நோக்காக அமைந்திருந்தது. 315 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இதில் பங்கேற்றிருந்தனர்.கம்பனியின் தனது ஒப்பற்ற செயற்பாடுகளின் மூலமாக, கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்து ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 24 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களத்தின் பிரதம சுகாதார அதிகாரி வைத்தியர் விஜேமுனி கருத்து தெரிவிக்கையில், 'டெங்கு பரவல் நாட்டில் தொடர்ந்து காணப்படுகிறது. பெருமளவில் நகர்புறங்களை அண்மித்துக் காணப்படுகிறது. 2014 ஆகஸ்ட் மாதம் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கையை 24 சதவீதத்தால் குறைக்க முடிந்தமை என்பது உண்மையில் எனக்கும், பொது சுகாதாரத் திணைக்களத்தைச் சேரந்த எனது அணியினருக்கும் பெரும் சாதனையாகும்.இதை எம்மால் தனித்து எய்த முடியாது. டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கு கூட்டாண்மை நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவது வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது. இந்த பெறுமதி வாய்ந்த செயற்பாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் எம்முடன் இணைந்துள்ளமையானது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும்' என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவின் உதவி பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், 'தனது சமூகத்துக்கு ஆரோக்கியமான நாளையை கட்டியெழுப்புவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு ஆரோக்கியமான மற்றும் உறுதியான சமூகங்களின் முக்கியத்துவம் பற்றி நாம் நன்கு அறிவோம். இதற்காக எமது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் மூலமாக பங்களிப்பு வழங்குவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்' என்றார்.

வெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் வசதி ஆகியவற்றினூடாக தமது வாடிக்கையாளர்களுடன் பங்காண்மைகளை கட்டியெழுப்புவது எனும் கொள்கைக்கமைய ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தனது இலக்கை வெளிப்படுத்தியிருந்தது. நம்பிக்கை எனும் தனது வாக்குறுதிக்கமைய கம்பனி மேலும் நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்து ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்ப கம்பனி திட்டமிட்டுள்ளது.