Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

பற்றி நிறைவேற்று கழகம்

நிறைவேற்று கழகம்

memeber image

டேர்க் பெரெய்ரா

பிரதம நிறைவேற்று அதிகாரி

2010 ஆம் ஆண்டு முதல் யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டேர்க் பெரெய்ரா பணியாற்றி வருகிறார். பிரித்தானியாவின் முகாமைத்துவ கணக்கியலாளர்களின் பட்டைய கல்வியகத்தின் அங்கத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை பட்டைய கணக்காளர்கள் கல்வியகத்தின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் MBA பட்டத்தைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

memeber image

தர்ஷன அமரசிங்க

பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்

யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் தர்ஷன 2005 செப்டெம்பர் மாதம் இணைந்து கொண்டார். காப்புறுதி துறையில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வளங்கள் ஆகிய பிரிவுகளில் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தை (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்) கொண்டுள்ளார். மருந்துப்பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையிலும் இவர் அனுபவத்தைக்கொண்டுள்ளார். சந்தைப்படுத்தலில் இவர் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவை கொண்டுள்ளதுடன், பிரித்தானியாவின் CIM இன் பட்டைய சந்தைப்படுத்துநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை பிரத்தியேக முகாமைத்துவ கல்வியகத்தின் பயிற்சிகள் மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தியில் டிப்ளோமா தகைமையை பெற்றுள்ளதுடன், இலங்கை பிரத்தியேக முகாமைத்துவ கல்வியகம், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் மற்றும் இலங்கை பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

memeber image

இரோஷினி தித்தகல

பொது முகாமையாளர், ஆயுள் காப்புறுதி

2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த பின்னர் தனது காப்புறுதித்துறை வாழ்க்கையை இரோஷினி ஆரம்பித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு யூனியன் அஷ்யூரன்ஸிலிருந்து விலகி தமது உயர் கல்வியை தொடரும் வகையில் பிரித்தானியா பயணமானார். அங்கு அவர் வணிக முகாமைத்துவ கற்கையில் இளமானி சிறப்புப்பட்டம் பெற்றார். 2008 இல் மீண்டும் யூனியன் அஷ்யூரன்ஸுடன் உதவி முகாமையாளராக இணைந்து கொண்டார். வெவ்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவத்துடன், தற்போதைய ஆயுள் காப்புறுதி பொது முகாமையாளர் எனும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இரோஷினி ஒரு பட்டைய காப்புறுதியாளர் என்பதுடன் பிரித்தானியாவின் பட்டைய காப்புறுதி கல்வியகத்தின் அங்கத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

memeber image

நிமேஷா லியனகே

பொது முகாமையாளர் – உண்மையுரிமை

நிமேஷா யூனியன் அஷ்யூரன்ஸுடன் தனது முதலாவது தொழில் காலப்பகுதியை 2006ம் ஆண்டு வெளியக புரொபெட் டிவலப்பராக ஆரம்பித்திருந்தார். 2008ல் யூனியன் அஷ்யூரன்ஸ் உண்மையுரிமை அணியுடன் இணைந்து கொண்டார். யூனியன் அஷ்யூரன்ஸுடன் 7 வருட காலம் வெவ்வேறு பதவிகளில் இவர் பணியாற்றியுள்ளார். 2013ல் இவர் நிறுவனத்திலிருந்து விலகி போட்டியாளர் நிறுவனமொன்றுடன் இணைந்து கொண்டார். 2016 செப்டெம்பர் மாதம் யூனியன் அஷ்யூரன்ஸுடன் நிமேஷா மீண்டும் உண்மையுரிமை பிரிவின் பொது முகாமையாளராக இணைந்து கொண்டார்.

நிதியியல் வணிகம் மற்றும் கணினியியல் கணித போன்வற்றில் முதல் வகுப்பு பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து நிமேஷா பெற்றுள்ளார். அமெரிக்காவின் உண்மையுரிமையியல் சமூகத்தின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

memeber image

சுரேஷ் முத்தையா

பொது முகாமையாளர் மனித வளங்கள்

சுரேஷ் ஜோன் கீல்ஸ் குழுமத்திலிருந்து 2016 மே மாதம் யூனியன் அஷ்யூரன்ஸுடன் இணைந்து கொண்டார். அங்கு இவர் சுமார் 5 வருட காலமாக விற்பனை பிரிவின் மனித வளங்கள் பிரிவின் – உப தலைவராக பணியாற்றியிருந்தார். அதற்கு முன்னதாக இவர் டயலொக் அக்ஸியாடா பிஎல்சியில் 4 வருடங்கள் வினைத்திறன் முகாமைத்துவம் மற்றும் மனித வளங்கள் கொள்கை செயற்பாடுகளுக்கான முகாமையாளராக செயலாற்றியிருந்ததுடன் காசன்ஸ் கம்பர்பெட்ச் குழுமத்திலும்இ லயன் பிரெவரி பிஎல்சி மற்றும் ஹோட்டல் துறையிலும் மனித வளங்கள் தலைமைத்துவ பதவிகளில் 7 வருட காலமாக பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். மனித வளங்கள் முகாமைத்துவத்தில் இவர் நிபுணத்துவ தகைமையைக் கொண்டுள்ளார் (IPM Sri Lanka). அவுஸ்திரேலியாவின் தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா மற்றும் MBA பட்டங்களையும் கொண்டுள்ளார். SHRM – USA மற்றும் இலங்கை மனித வளங்கள் நிபுணர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

memeber image

ஹர்ஷ சேனநாயக்க

பொது முகாமையாளர் - தகவல் தொழில்நுட்பம்

யூனியன் அஷ்யூரன்ஸுடன் ஹர்ஷ 2016 ஒக்டோபரில் இணைந்து கொண்டார்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்ததுடன், 14 வருட கால அனுபவத்தை தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தில் பெற்றுள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் இவர் பல பதவிகளை வகித்துள்ளதுடன், வியாபாரத்துக்கு அதன் பங்களிப்பு தொடர்பில் ஆழமான அறிவைப்பெற்றுள்ளார்.

இவர் கணனி விஞ்ஞானத்தில் லன்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்திடமிருந்து இளமானிப்பட்டத்தை பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து தகவல் கட்டமைப்பு முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

memeber image

ஆஷா பெரேரா

பொது முகாமையாளர் - நிதியியல் மற்றும் திட்டமிடல்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியில் உப தலைவராக ஆஷா செயலாற்றியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் பெருந்தோட்ட சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2005 இல் ஜோன் கீல்ஸ் குழுமத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர், ஆடைத் தொழிற்துறையில் செயற்பாடுகள் மற்றும் நிதியியல் துறைசார் பொறுப்புகளை கொண்டிருந்தார். முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு கல்வியகத்தின் (PIMA) வணிக முகாமைத்துவம் (MBA) மாஸ்டர்ஸ் பட்டத்தை கொண்டுள்ளதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து முகாமைத்துவத்தில் இளமானி பட்டத்தை (மனித வளங்கள் முகாமைத்துவம்) கொண்டுள்ளார். பிரித்தானியாவின் முகாமைத்துவ கணக்காளர்கள் பட்டய கல்வியகத்தின் இணை அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.