Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

பாதுகாப்பு மேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு

மேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு

விபத்து உயிரிழப்பு அனுகூலம்

விபத்தின் காரணமாக நிகழும் உயிரிழப்புகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 2 மடங்கு கொடுப்பனவு வழங்கப்படும். (யூனியன் சிசுமக திட்டத்துக்கு பொருந்தாது)

குடும்ப வருமான அனுகூலம் (FIB)

ஆயுள் காப்புறுதிதாரரின் உயிரிழப்பின் போது, குடும்ப வருமான அனுகூலத் தொகைக்கு சமமான வருடாந்த வருமான தொகையை காலாண்டு தவணைக் கொடுப்பனவு அடிப்படையில், காப்புறுதி காலாவதியாகும் வரை நிறுவனம் செலுத்தும்.

குடும்ப காப்பீட்டு அனுகூலம் / நிலை தவணை (LTB)

உங்கள் தவணைக்கட்டணத்தில் சிறிதொரு தொகையை நீங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 5 மடங்கு வரை இந்த அனுகூலம் உங்களுக்கு வழங்கும், விபத்து மூலம் அல்லது இயற்கை உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இந்த கொடுப்பனவு மேற்கொள்ளப்படும்.

மரணச்சடங்கு செலவீன அனுகூலம் (FEB)

உயிரிழப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டதும், மரணச் சடங்கு செலவீனங்களுக்காக ரூ. 50,000/- வரை வழங்கப்படும்.

வாழ்க்கைத் துணை அனுகூலம் (SPB)

காப்புறுதிதாரரின் வாழ்க்கைத் துணைக்கு ஆயுள் காப்பீட்டை இந்த அனுகூலம் வழங்கும்.

நிலையான மற்றும் பகுதியான அங்கவீன அனுகூலம் - விபத்து காரணமாக (EPD)

விபத்து காரணமாக பகுதியான மற்றும் நிலையான அங்கவீனம் ஏற்பட்டால், அங்கவீனத்தின் தன்மையின் பிரகாரம் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் குறித்த சதவீதம் காப்புறுதிதாரருக்கு வழங்கப்படும்.

முழுமையான நிரந்தர அங்கவீன அனுகூலம் - விபத்து அல்லது சுகயீனம் காரணமாக (TPS)

விபத்து அல்லது சுகயீனம் காரணமாக நிலையான முழுமையான அங்கவீனம் ஏற்படின், காப்பீடு செய்யப்பட்ட தொகை 5 சம வருடாந்த தவணைக் கட்டணங்களாக செலுத்தப்படும்.(யூனியன் சிசுமக திட்டத்துக்கு பொருந்தாது)

முழுமையான நிலையான அங்கவீன அனுகூலம் - விபத்து காரணமாக (TPA)

விபத்து காரணமாக ஏற்படும் நிலையான முழுமையான அங்கவீனத்துக்கு, காப்பீடு செய்யப்பட்ட தொகை 5 சம வருடாந்த தவணைக் கட்டணங்களாக செலுத்தப்படும்.

தவணைக்கட்டணம் விலக்கழிப்பு (WPB)

விபத்து அல்லது சுகயீனம் காரணமாக முழுமையான மற்றும் நிலையான அங்கவீனம் ஏற்படின், பின்வருவனவற்றுக்கான தவணைக்கட்டணம் விலக்கழிக்கப்படும்,
  • அடிப்படை ஆயுள் காப்பீடு
  • சுவமக அனுகூலம் (CIC)
  • வாழ்க்கைத் துணை அனுகூலம் (வைத்தியசாலை அனுமதி மற்றும் வாழ்க்கைத் துணைக்கான சுவமக அடங்கலாக)
  • பரிபூரண சத்திரசிகிச்சை அனுகூலம்
  • சிறுவர் சுகாதார அனுகூலம்

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.