Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

சுகாதாரம் மேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்

மேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்

யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் காப்புறுதி திட்டத்தில் இணைத்துக் கொள்ளக்கூடிய மேலதிக மருத்துவ செலவீனங்களை மீளப் பெற்றுக் கொள்ளக்கூடிய பரிபூரண அனுகூலத்திட்டமாக யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் அமைந்துள்ளது. சாதாரண காய்ச்சல் முதல் பாரிய நோய் நிலைகள் வரை வெவ்வேறான நோய்கள்/சத்திரசிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கும்.

வைத்தியசாலை பண அனுகூலம் (HCB)

காப்புறுதித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால், ஆயுள் காப்புறுதி செய்தவருக்கும் அவரின் வாழ்க்கைத்துணைக்கும் பொருந்தும் வகையில் வைத்தியசாலை பண அனுகூலம் அமைந்துள்ளது. வைத்தியசாலை அனுமதி காப்பீடு நாளொன்றுக்கு ரூ. 10000 வரையில் மொத்தமாக வருடமொன்றில் 180 நாட்களுக்கு வழங்கப்படும். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால், இந்த தொகை இரு மடங்காக்கப்படும்.

சுவமக அனுகூலம் (SMB)

சுவமக அனுகூலம் (பாரதூரமான நோய் காப்பீடு - CIC) மூலமாக 24 குறிப்பிடப்பட்ட நோய்நிலைகளுக்கான காப்பீடு 3 மில்லியன் ரூபாய் வரை வழங்கப்படும். முன்கணிக்கப்பட்ட பாரதூரமான நோய் நிலை இனங்காணப்படின், இந்த காப்பீட்டின் கீழ் பெற்றுக் கொள்ளத்தக்க தொகை வழங்கப்படும்.

குழந்தை சுகாதார அனுகூலம் (CHB)

குழந்தை சுகாதார அனுகூலம் மூலமாக வைத்தியசாலை அனுமதி காப்பீடு (ஆகக்கூடியது ரூ. 5000 மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் இருமடங்கு அனுகூலம்) மற்றும் சத்திர சிகிச்சை அனுகூலம் 244 சத்திர சிகிச்சைகள் உள்ளடங்கலாக (ஆகக்கூடியது 1 மில்லியன் ரூபாய்) வழங்கப்படும்.

பரிபூரண சத்திரசிகிச்சை அனுகூலம் (CSB)

காப்புறுதி அமுலிலுள்ள காலப்பகுதியில் பரிபூரண சத்திரசிகிச்சை அனுகூலத்தின் மூலமாக 1.5 மில்லியன் ரூபாய் வரை நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள முடியும் (அல்லது நீங்கள் காப்புறுதி செய்யப்பட்ட பரிபூரண சத்திரசிகிச்சை அனுகூல தொகையின் 3 மடங்கு). மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு நீங்கள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.