1st Prize Winner
காப்புறுதியின் முக்கியத்துவம் நாளெலாம் தொழில்செய் மாந்தர் நலமிகு வாழ்வை வாழ ஊளையும் நலியச் செய்து உஞற்றுவார் நன் முயற்சி பாழுறச் செய்ய ஆங்கே பலவித துயரங் கூடில் வாழ்ந்திடும் வழியைத் தேடி வாட்டமே கொள்வா ரன்றோ பொருள் இலார்க் கிவ்வுலகம் சுகிப்பது இல்லை யென்று பொய்யா மொழிப் புலவன் புகன்றிட்டான் திருக் குறளில் பொருளினைச் பேணும் வழியோ அறமொடு இருத்தல் வேண்டும் சேமிப்பு, ஈட்டல், தானம், காப்பென செய்தல் நன்றே. சேர்த்திடும் பொருளை நான்காய் வகுத்திடும் வழிகள்