சுகாதார அனுகூலங்கள்

யூனியன் Health 360 (H360)

உங்களின் சகல மருத்துவக் காப்பீட்டுத் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் சிறந்த சுகாதாரக் காப்பீடு தற்போது அறிமுகமாகியுள்ளது. ஹெல்த் 360 என்பது, உங்கள் குடும்பத்துக்கான பரிபூரண சுகாதாரக் காப்புறுதித் தீர்வாக, உங்கள் ஆயுள் காப்புறுதியில் இணைத்துக் கொள்ளக்கூடிய சுகாதாரக் காப்பீடாகும்.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ரீமியர் (USHP)

ஆயுள் காப்புறுதிதாரரின் மருத்துவச் செலவுகளை மீளவழங்கும். ஆயுள் காப்புறதிதாரரின் பெற்றோர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் 23 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இலங்கையினுள் அல்லது உலகளாவிய ரீதியில் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா தவிர்த்து) பெருமளவு மேலதிக அனுகூலங்களுடன் காப்பீட்டைப் பெறலாம்

வைத்தியசாலை பண அனுகூலம் (HCB)

வைத்தியசாலை அனுமதி காரணமாக ஏற்படும் தினசரி வருமான இழப்பை மீள வழங்குவது

சுவமக அனுகூலம் (SMB)

பாரதூரமான நோய்நிலை அல்லது சத்திரசிகிச்சையின் போது மருத்துவ சிகிச்சைக்கு அவசியமான நிதி உதவியை வழங்குவதுடன், மொத்த தொகையாக கொடுப்பனவை மீள வழங்கும்.

பரிபூரண சத்திரசிகிச்சை அனுகூலம் (CSB)

விபத்தினால் அல்லது சுகயீனத்துக்கு சிகிச்சையளிப்பதற்காக, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதும் மொத்தமாக மொத்தத் தொகை வழங்கப்படும்.

சிறுவர் சுகாதார அனுகூலம் (CHB)

தினசரி பண அனுகூலத்தை வழங்குவதுடன் சிறுவர்களில் மேற்கொள்ளப்படும் 244 சத்திரசிகிச்சைகளை உள்ளடங்கியுள்ளது.

அங்கவீன அனுகூலங்கள்

விபத்து அல்லது சுகயீனம் காரணமான முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீன அனுகூலம் (TPS)

காப்புறுதி காலப்பகுதியில் விபத்துகள் அல்லது சுகயீனம் காரணமாக எழும் முழுமையான நிரந்தர அங்கவீனங்களுக்காக காப்பீட்டுத் தொகை 5 சமமான வருடாந்த தவணைக் கட்டணங்களில் செலுத்தப்படும்

விபத்தினால் மாத்திரம் ஏற்படும் முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீன அனுகூலம் (TPA)

காப்புறுதி காலப்பகுதியில் விபத்தால் எழும் முழுமையான நிரந்தர அங்கவீனங்களுக்காக காப்பீட்டுத் தொகை 5 சமமான வருடாந்த தவணைக் கட்டணங்களில் செலுத்தப்படும்

நீடிக்கப்பட்ட பகுதியளவு அங்கவீனம் (EPD)

காப்புறுதி காலப்பகுதியில் விபத்தால் எழும் பகுதியளவு நிரந்தர அங்கவீனங்களுக்காக காப்பீட்டுத் தொகையின் குறிப்பிட்ட சதவீதம் செலுத்தப்படும்

மேலதிக ஆயுள் அனுகூலங்கள்

நிலை தவணை அனுகூலம் (LTB)

சிறிதளவு மேலதிக முதலீட்டில் உங்கள் காப்பீட்டுத் தொகையை 10 மடங்கினால் அதிகரித்து உங்கள் ஆயுள் காப்பீட்டை அதிகரித்து கொள்ளவும்

விபத்துசார் மரண அனுகூலம் (ADB)

விபத்தினால் மரணம் சம்பவித்தால் அடிப்படை ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக மொத்தத் தொகை செலுத்தப்படுவது

வாழ்க்கைத் துணைக்கான அனுகூலம் (SPB)

வாழ்க்கைத்துணை எதிர்பாராமல் உயிரிழந்தால் மொத்த தொகையாக பணக்கொடுப்பனவுடனான நிதிசார் பாதுகாப்பை வழங்கும்

மரணச் சடங்கு அனுகூலம் (FEB)

காப்புறுதிதாரரின் உயிரிழப்பின் போது மரணச் சடங்குக்கான செலவீனத்தை ஈடு செய்யும்

வருமான இழப்புக்கான அனுகூலங்கள்

குடும்ப வருமான அனுகூலம் (FIB)

குடும்பத்தின் பிரதான வருமானமீட்டுபவர் உயிரிழந்தால், காப்புறுதித் தவணை நிறைவடையும் வரை குடும்ப அங்கத்தவர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், காலாண்டு அடிப்படையில் மொத்தத் தொகை வழங்கப்படும்

கட்டுப்பண விலக்கழிப்பு (WP)

முழுமையான நிரந்தர அங்கவீனத்தின் போது, எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள கட்டுப்பணங்கள் விலக்கழிக்கப்படுவதுடன், முதிர்வின் போது எதிர்பார்க்கப்படும் முதிர்வு நிதியை பெற்றுக் கொடுக்கும் வகையில், பங்கிலாபங்கள் தொடர்ந்தும் வைப்புச் செய்யப்படும்.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது